முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்தின் முதல் பணிப்பாளரும் ஓய்வு பெற்ற இலங்கை நிர்வாக சேவை உத்தியோகத்தருமான எம்.எம். அன்சார் (87) நேற்று முன்தினம் (15) காலமானார். கொழும்பை பிறப்பிடமாகக் கொண்ட இவர் முஸ்லிம் சமய கலாசார திணைக்களம், ஐ.தே.க அரசினால் உருவாக்கப்பட்ட போது அதன் முதற் பணிப்பாளராக நியமிக்கப்பட்டார்.
1977 ஆம் ஆண்டு முதல் 1987 ஆம் ஆண்டு வரை அப் பதவியை வகித்தார். அதற்கு முன் அவர் கண்டி, கச்சேரி, கொழும்பு கச்சேரி மற்றும் திறைசேரி ஆகியவற்றில் உயரதிகாரியாக பணிபுரிந்தார்.
இலங்கை தப்லீக் ஜமாஅத்தின் சூறாவின் அங்கத்தவரான இவர் வக்பு சபையின் தலைவராகவும் பணிபுரிந்தார். அரசாங்க சேவையின் மிக நேர்மையாக பணிபுரிந்த ஓர் அதிகாரி என பல தரப்பினராலும் பாராட்டுக்களைப் பெற்ற இவர் 7 பிள்ளைகளின் தந்தையாவார்.
இவரது ஜனாஸா நேற்றிரவு வெள்ளவத்தை ராஜசிங்க வீதியிலுள்ள 16 ஆம் இலக்கத்திலிருந்து தெஹிவளை ஜும்ஆப் பள்ளிவாசலுக்கு கொண்டு செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது. இவரது ஜனாஸா தொழுகையில் பெருந்திரளான மக்கள் பங்கு பற்றினர்.
-நன்றி விடிவெள்ளி –