• Sun. Oct 12th, 2025

கட்டாருக்கு வழி திறந்து விட்ட சவூதி அரேபியா!

Byadmin

Aug 17, 2017

தொடரும் பகைமையை மறந்து, கத்தாரின் ஹஜ் பயணிகளுக்காக அதன் எல்லைக் கதவுகளைத் திறந்து விட உள்ளது சவூதி அரேபியா.

சவூதி, பஹ்ரைன், ஐக்கிய அமீரகம் உள்ளிட்ட நாடுகள் கட்டாருடனான தங்கள் தூதரக உறவுகள் அனைத்தையும் முறித்தன.

வான் வழியிலும் கடல் வழியிலும் கட்டார் விமானங்கள், கப்பல்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. மேலும், கட்டார் தூதர்களையும் நாடு திரும்ப உத்தரவிட்டது.

இதனால், கட்டாருக்கும் சவூதி அரேபியாவுக்குமான உறவு முற்றிலும் முறிந்த நிலையில், தற்போது சவுதி அரேபியா தன் எல்லைக் கதவுகளை கட்டாரின் ஹஜ் பயணிக்களுக்காகத் திறந்து விட முடிவுசெய்துள்ளது.

சவுதி அரேபியாவில் உள்ள மெக்கா புனித தலத்திற்கு கட்டாரிலிருந்து ஹஜ் யாத்திரீகர்கள் அதிகளவில் வருவதுண்டு.

இந்த ஆண்டும் கட்டார் யாத்திரீகர்கள் பயணத்துக்கு ஒருவித சந்தேகத்துடனே தயாராகி வந்தனர்.

சவூதி அரேபியாவுடனான உறவு இக்கட்டான நிலையில் உள்ளபோது, யாத்திரை குறித்த சந்தேகம் நிலவி வந்தது.

இந்நிலையில், கட்டாரின் ஹஜ் யாத்திரீகர்களுக்காக சவுதி தன் எல்லைக் கதவுகளைத் திறக்க முடிவு செய்திருப்பது வரவேற்புக்குரியதாக கட்டார் யாத்திரீகர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *