• Sun. Oct 12th, 2025

மக்கா இஸ்லாமிய மாநாட்டில், நிறைவேற்றப்பட்ட 11 கோரிக்கைகள்

Byadmin

Aug 15, 2023

வழங்குவதற்கு தகுதியானவர்களிடமிருந்தே பத்வாக்கள் பெறப்பட வேண்டும். உதிரியான பத்வாக்களைத் தவிர்ப்பதும் அத்தியவசியமானது என்பதை இம்மாநாடு வலியுறுத்துகின்றது. 

  1. நாஸ்தீகம், பண்பாட்டுச் சீரழிவு என்பவற்றிலிருந்து சமூகங்களைப் பாதுகாப்பைக் கட்டியம் கூறும் அடிப்படையில்  குடும்பத்தைப் பாதுகாப்பதும், இளம் தலைமுறையினை முறையாக வளர்ப்பதும் இன்றியமையாததாகும். முறையான பரிகாரம், பாதுகாப்பு என்பவற்றை இலக்காகக் கொண்ட பல்வேறு செயற்திட்டங்களின் ஊடாக இவை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதையும் இம்மாநாடு வலியுறுத்துகின்றது. 
  2. இஸ்லாத்திற்காகவும் முஸ்லிம்களுக்காகவும் சேவை செய்வதிலும் மார்க்க விவகாரத் திணைக்களங்கள், மார்க்கத் தீர்ப்பாயங்கள், அறிஞர்களுக்கு மத்தியில் தொடர்ச்சியான உறவைப் பேணி அவர்களுக்கிடையில் முழுமைத்துவத்தை உருவாக்குவதற்காக ஸவுதி அரேபிய அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுவரும் முயற்சிகளை இம்மாநாடு பெரிதும் மதிக்கின்றது. 
  3. உலக முஸ்லிம்களுக்கு மத்தியில் கருத்தொற்றும் உடன்பாடு என்பவற்றை உறுதிப்படுத்தும் வகையில் இஸ்லாமிய விவகாரங்களில் அறிஞர்கள், மார்க்கத் தீர்ப்பாயங்கள், இஸ்லாமிய விவகாரத் திணைக்களங்கள் தொடர்ச்சியான உறவையும், அனுபவப் பகிர்வையும், ஒத்துழைப்புக்களையும் வழங்குமாறு இம்மாநாடு அழைப்பு விடுக்கின்றது. 
  4. குர்ஆனையும், ஸுன்னாவையும் பற்றிப்பிடிப்பதே மார்க்கத்தின் அடிப்படை, அதில் வழிகேடு றெிபிறழ்வுகளிலிருந்து பாதுகாப்பு உள்ளது என்பதை இம்மாநாடு உறுதிப்படுத்துவதுடன் பிரச்சினைகளிலிருந்து தப்பித்துக்கொள்ள அவற்றை சரியான அடிப்படையில் விளங்கி அவை இரண்டையும் பற்றிப்பிடித்துக்கொள்வது இன்றியமையாயதாகும் என்பதையும் இம்மாநாடு வலியுறுத்துகின்றது. 
  5. பாடத்திட்டங்கள், கற்பித்தல் முறைகள், மார்க்க உபநியாசங்களில் நடுநிலை நீதம் என்பவற்றை மிக உயர்ந்த அடிப்படையில் பேணுவது இஸ்லாமிய உலகின் அறிஞர்கள், மார்க்கத் தீர்ப்பாயங்கள், இஸ்லாமிய விவகார அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களின் பொறுப்பு எனவும் பண்பாட்டுச் சிதைவு, எல்லை மீறல், தீவிரவாதம் என்பவற்றுக் எதிராகப் போராடுதல், மற்றும் திட்டமிடப்பட்ட நிகழ்ச்சி நிறல்கள் மூலம் இமாம்கள், கதீப்களை தயார்படுத்துவதின் ஊடாக இதை சாத்தியப்படுத்தலாம் என்பதையும் இம்மாநாடு உறுதிப்படுத்துகின்றது. 
  6. இஸ்லாத்தை கொச்சைப் படுத்துவதற்கு எதிராகவும் இஸ்லாத்தின் தாரளத் தன்மை, அதன் நீதம், அன்பு அநியாயம் அத்துமீறலை அது ஹராமாக்கியிருப்பது என்பவற்றை தெளிவுபடுத்துவதும், தீவிரவாதக் குழுக்களின் சிந்தனைகள் ஒழுங்கீனமான அதன் போக்குகள் அதனால் இஸ்லாத்திற்கு ஏற்படும் ஊறுகள் என்பவற்றை எடுத்துறைப்பதும், அவைகள் தங்கள் செயற்பாடுகளின் மூலம் பித்னாக்களையும் பிழவுகளையும் தோற்றுவிக்கின்றன சமூகங்களுக்கிடையில் பாதுகாப்பின்மை மற்றும் நிலையற்ற தண்மையையுமே பரப்புகின்றன என்பதை தெளிவுபடுத்துவதையும் இம்மாநாடு அவசியப்படுத்துகின்றது. 
  7. புனித குர்ஆனின் பிரதிகளை தொடர்ச்சியாக எரித்து கோபத்தை ஊட்டும் செயற்பாடுகளில் ஈடுபடுவதை இம்மாநாடு வன்மையாகக் கண்டிக்கின்றது. நிச்சயாக இவ்வாரான படு மோசமான செயற்பாடுகள் வெறுப்புணர்வையும், காழ்ப்புணர்ச்சியையும் இணப்பாகுபாட்டையும் தூண்டுவதாகும் என்பதோடு மனத குழத்திற்கு மத்தியில் இணைந்து வாழ்வதற்கான விழுமியங்களுக்கும் முரணானதாகும் என்பதை இம்மாநாடு உறுதிப்படுத்துகின்றது.

அத்தோடு ஸவுதி அரேபியாவின் இஸ்லாமிய விவகாரங்கள், அழைப்பு மற்றும் வழிகாட்டல் அமைச்சினால் உலகளாவிய முஸ்லிம் அறிஞர்கள் பத்வா அமைப்புக்கள் இஸ்லாமிய விவகாரத் திணைக்களங்கள் என்பவற்றுக்கிடையில் தொடர்பையும் முழுமைத்துவத்தையும் பேணுவதற்காக நீதம் நடுநிலை என்பவற்றைப் பரப்பவும் எடுக்கப்படும் முயற்சிகளை இம்மாநாடு பாராட்டுவதோடு,  இவ்விடயத்தின் முக்கியத்துவத்தைக் கருத்திற் கொண்டு தொடர்ச்சியாக இம்மாநாடு நடாத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்துகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *