நீர்க்கொழும்பில் பாரிய கட்டடம் ஒன்று இடிந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஹோட்டல் நிர்மாணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்த கட்டடமே இவ்வாறு இடிந்து விழுந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
கட்டடத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த இருவர் காப்பாற்றப்பட்டுள்ளதாகவும், மூன்று பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள ஏனையவர்களை தேடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மீட்கப்பட்ட இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.