பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைவர் பாபர் அசாம் திங்களன்று செய்தியாளர் சந்திப்பில், இலங்கை தற்போது தனது இரண்டாவது தாயகம் போன்றது என்று தெரிவித்தார்,
ஹம்பாந்தோட்டையில் இன்று ஆரம்பமாகவுள்ள பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான ஒருநாள் போட்டித் தொடருக்கு முன்னதாக பாபர் அசாம் இவ்வாறு தெரிவித்தார்.
நான் சில மாதங்கள் இங்கு இருக்கிறேன். இங்கே இலங்கைக்கு எதிராக டெஸ்ட் விளையாடியது, பிறகு டpl விளையாடியது, இப்போது ஆப்கானிஸ்தான் மற்றும் ஆசிய கோப்பை இங்கே உள்ளது. இடையில் இரண்டு நாட்கள் மட்டுமே பாகிஸ்தானுக்குச் சென்றேன் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.