• Wed. Oct 15th, 2025

கிராம சேவகர் செய்துள்ள பாரிய மோசடி

Byadmin

Aug 23, 2023


மாணவர்களை பாடசாலையில் சேர்ப்பதற்காக போலி ஆவணங்களை தயாரித்த கிராம சேவகர் ஒருவரை கண்டி விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
கல்வி அமைச்சின் மேலதிக செயலாளரினால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைக்கு அமைய தெய்யன்னேவெல பிரதேசத்திற்கு பொறுப்பான கிராம சேவகரே கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கல்வி அமைச்சின் மேலதிக செயலாளரின் உத்தியோகபூர்வ பெயர், பதவி மற்றும் அமைச்சின் லெட்டர்ஹெட் ஆகியவற்றைப் பயன்படுத்தி போலி ஆவணங்களை தயாரித்து கண்டி பிரதேசத்தில் உள்ள பெண்கள் கல்லூரியில் 29 சிறுவர்களை சேர்த்து மோசடி செய்துள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, போலி ஆவணங்களை தயாரித்து, தவறான தகவல்களை பதிவு செய்து, கிராம சேவகர் சான்றிதழ் வழங்கிய குற்றச்சாட்டில் கிராம சேவகர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கண்டி தர்மசோக மாவத்தையை சேர்ந்த 45 வயதுடைய சந்தேகநபர் கண்டி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *