• Wed. Oct 15th, 2025

நீர்கொழும்பில் பஸ் தீக்கிரை

Byadmin

Aug 24, 2023

யாழ்ப்பாணத்திலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு பயணிகளை ஏற்றி வந்தபஸ் வியாழக்கிழமை (24) அதிகாலை 4:30 மணியளவில் நீர்கொழும்பில் தீ விபத்துக்கு உள்ளாகிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

வெளிநாடு செல்வதற்காக  35 பயணிகளை ஏற்றி வந்த என்.டி. 0321 இலக்கம் கொண்ட சொகுசு  பஸ்  ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியது.

இதன் போது பஸ் முற்றாக எரிந்து உள்ளதுடன் பயணிகள் எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் சம்பவம் தொடர்பில் கொச்சிக்கடை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரியவந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *