• Tue. Oct 14th, 2025

வாகன விபத்தில் ஆசிரியர் வபாத்

Byadmin

Aug 24, 2023

மட்டக்களப்பு கொழும்பு வீதியில் ஓட்டமாவடி – புனானை எனும் இடத்தில் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஆசிரியர் ஒருவர் மரணமடைந்துள்ளதுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

ரிதிதென்னை பிரதேசத்தில் இருந்து ஓட்டமாவடி நோக்கி வந்த மோட்டார் சைக்கிளும் அக்கரைப்பற்றில் இருந்து கொழும்பு நோக்கி வந்த தனியார் சொகுசு பஸ்சும் புனானை பிரதேசத்தில் வைத்து நேருக்கு நேர் மோதியதில் இவ் விபத்து இடம் பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.

ரிதிதென்ன இக்ரஹ் வித்தியாலயத்தின் ஆங்கிலப்பாட ஆசிரியரான ஸர்பராஸ் ஹூஸைன் முஹம்மது அஸாம் (வயது – 25) என்பவரே மரணமடைந்தவர் என்றும் மற்றய இளைஞரான புஹாரி நுஸைக் அஹமட் என்பவர் காயமடைந்த நிலையில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

மரணமடைந்த   ஸர்பராஸ் ஹூஸைன் முஹம்மது ஆஸாம் என்பவர் அன்மையில் வழங்கப்பட்ட ஆங்கில டிப்ளோமா ஆசிரியர் நியமணம் பெற்று ரிதிதென்ன இக்ரஹ் வித்தியாலயத்தில் கடமையாற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்து.

பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் இவ் விபத்து தொடர்பான விசாரனைகளை வாழைச்சேனை போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *