• Sun. Apr 12th, 2026

தங்கம் வென்றார் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா

Byadmin

Aug 28, 2023

உலக தடகள செம்பியன்ஷிப் தொடரின் ஆடவர் ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில், இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றுள்ளார்.

2 ஆவது வாய்ப்பில் 88.17 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து வென்றுள்ளார் நீரஜ் சோப்ரா.

உலக தடகள செம்பியன்ஷிப் தொடரில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையை நீரஜ் சோப்ரா படைத்துள்ளார்.

இதனை தொடர்ந்து பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் 87.82 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து 2 ஆம் இடம் பிடித்தார்.

இந்திய வீரர் கிஷோர் ஜெனா 84.77 மீ. தூரம் ஈட்டியை வீசி, 5 ஆம் இடம் பிடித்துள்ளார்.

மற்றொரு இந்திய வீரர் டி.பி.மானு 83.72 மீட்டருடன் 6 ஆம் இடம் பிடித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *