வெளியுறவுத்துறை அமைச்சராக நியமனம் பெற்றுள்ள அமைச்சர் திலக் மாரப்பன இன்று தமது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்கவுள்ளார்.
குறித்த நிகழ்வு இன்று காலை 8.30 மணியளவில் அமைச்சில் இடம்பெறுவதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும், வெளிவிவகார அமைச்சராக இருந்த ரவி கருணாநாயக்க தனது பதவியை இராஜினாமா செய்ததை தொடர்ந்து புதிய வெளிவிவகார அமைச்சராக அபிவிருத்தி செயற்றிட்ட அமைச்சர் திலக் மாரப்பன 15 ஆம் திகதி சத்தியப்பிரமாணம் செய்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.