இலங்கையிலேயே முதற் தடவையாக இருதய மாற்று சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட பெண் வசிக்கும் வீட்டை குளிரூட்டல் வசதிகளுடன் முழுமையாக மாற்றி அமைத்துக் கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
டாக்டர்களின் ஆலோசனைகளின் பேரிலும், சுகாதார நிலைமைகளை கருத்தில் கொண்டுமே நாச்சியாதீவு பிரதேச செயலகம் இவ்வீட்டை அமைத்துக் கொடுக்க முன் வந்துள்ளது.
நாட்டிலே மேற் கொள்ளப்பட்ட முதலாவது இருதய மாற்று சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு வெற்றி பெற்றவர் அநுராதபுரம், ஹிதோகம, களு ஆராச்சியாகம என்ற விலாசத்தில் வசிக்கும் ஒரு பிள்ளையின் தாயாரான 37 வயது டைய புஷ்பா குமாரி என்பவரே. இவர் தற்சமயம் கண்டி போதனா
வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இத் திட்டத்தினூடாக புதிய இரண்டு அறைகளுடன், குடி இருக் கும் வீட்டை பூரணமான வீடாக அமைத்துக் கொடுக்கும் பணி நாச்சியாதீவு பிரதேச செயலாளர் சரத் விஜேசிங்க உட்பட உத்தியோகத் தர்களைக் கொண்ட குழுவினரால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
சூரிய ஒளி மின்சாரம் உட்பட குளிரூட்டல் வசதிகளை ஏற்பாடு செய்து
கொடுக்க இவர்களுக்கு உதவுமாறு கேட்கப்பட்டுள்ளது.
சுமார் 7 மணி நேரமாக செய்யப் பட்ட இச்சத்திர சிகிச்சை வெற்றி யளித்துள்ள நிலையில் மேற்படி பெண்ணுக்குத் தேவையான அடிப் படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது எமது பொறுப்பும், கட மையுமாகும்.
அந்த வகையில் நலன் விரும்பிகள் முன் வருவார்களாயின் மிக அவசரமாக இவற்றை செய்து கொடுக்க முடியும் என்றார் பிரதேச செயலாளர்.
மேற்படி பெண்ணின் கணவர் கூலி வேலை செய்து காலம் கடத் துபவர் என்றும், இவர்களின் ஒரே மகள் தரம் 8 ல் கல்வி கற்பவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வில் நாச்சியாதீவு பிரதேச செயலாளர் சரத் விஜேசிங்க, உதவி பிரதேச செயலாளர் ஜே. ரலியுத்தீன், நிர்வாக உத்தியோகத்தர் முனசிங்க உட்பட,கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண் டிருந்தனர்.