இலங்கையின் வரலாற்று தொழில்நுட்பம் தொடர்பில் ஆய்வு செய்வதற்காக ஜப்பான் தேசிய பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.
அனுராதபுரம், பொலன்னறுவை, சிகிரியா போன்ற பிரதேசங்களில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் தொடர்பில் ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது.
இந்த மாணவர்கள் அண்மைய நாட்களில் பேராதனை பல்கலைக்கழகத்தில் ஆரம்ப ஆய்வு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள நிலையில் அனுராதபுரத்தில் ஆய்வு நடவடிக்கைகளுக்காக கலந்து கொள்ளவுள்ளனர்.
டோக்கியோ பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்பம் தொடர்பிலான 30க்கும் அதிகமான மாணவர்கள் ஆய்விற்காக ஈடுபட்டுள்ளனர்.
குறித்த மாணவர்கள் ஆசியாவில் ஆய்விற்காக வந்துள்ள முதல் சந்தர்ப்பம் இதுவென அந்த பல்கலைக்கழகத்தின் வெளிவிவகார அமைச்சு தொடர்பிலான பேராசிரியர் தெரிவித்துள்ளார்.