பேருவளை சீனன்கோட்டையைச் சேர்ந்த மொஹமட் மர்சூக் பாத்திமா ரிஸ்தா சட்டத்தரணியாக உச்சநீதிமன்ற பிரதி பிரதம நீதியரசர் பிரிய சாத் ஜெராட் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
சீனன் கோட்டையின் முதல் பெண் சட்டத்தரணியான இவர், ஆரம்ப கல்வி முதல் உயர் தரம் வரை தனது கல்வியை சீனன்கோட்டை நளிம் ஹாஜியார் மகளிர் கல்லூரியில் பயின்று. (உ/ த) கலைப்பிரிவில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று மாவட்ட மட்டத்தில் 11 வது நிலையில் கொழும்பு பல்கலைக் கழக சட்ட பீடத்திற்கு தெரிவு செய்யப்பட்டார்.
அங்கு சட்டத்துறை யில் பல திறமைகளை வெளிக்காட்டிய இம் மாணவி, சட்டத்துறை இறுதி ஆண்டு பரீட்சையில் (2O16) சிறப்பு சித்திகளுடன் சித்தியடைந்து சட்டப்பட்ட தாரியானதோடு சட்டக்கல்லூரியிலும் பயின்று சட்டத்தரணியாக வெளியேறினார்.
இவர் சீனன்கோட்டையைச் சேர்ந்த மொஹமட் மர்சூக், பாத்திமா ஹம்ஸியா தம்பதிகளின் புதல்வியாவார்.