• Sat. Oct 11th, 2025

நபிகள் நாயகம் போல, மாற்றத்தை ஆரம்பித்து வைப்பவராக மாறுங்கள் – அநுரகுமார

Byadmin

Sep 28, 2023

நாட்டுக்குத் தேவை மாற்றத்திற்கான பயணமாகும்.  நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப்போல் இந்த மாற்றத்தை ஆரம்பித்து வைப்பவராக மாறுங்கள்!

இன்றைய (28) தினம் மீலாத் – உன் – நபி தினம் அல்லது இஸ்லாமிய மார்க்கத்தின் ஸ்தாபகரான முஹம்மது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பிறந்த நாளைக் கொண்டாடுகின்ற,  இலங்கைவாழ் இஸ்லாமிய அடியார்களுக்கு  தேசிய மக்கள் சக்தியின்  நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறோம். 

அரபு பிரதேசம் பூராவிலும் பரந்து பலவீனமுற்று, பலம்பொருந்திய பூர்வீகக் குடிகளின் கட்டுப்பாட்டுக்கு இலக்காகி காணப்பட்ட   அரபு பிரதேசத்திற்கு பலம்பொருந்திய இராச்சியமொன்றை உருவாக்கித் தந்தவர் அவரே.  

அது எவராலும் சாதிக்க இயலாதென  மரபுரீதியாக சிந்தித்திருந்த சமயத்திலாகும். எனினும் வித்தியாசமாக சிந்தித்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அந்த மாற்றத்திற்கான ஆரம்பகர்த்தாவாகவும்,   அதனை நடைமுறைப்படுத்திய மார்க்க அறிஞராகவும் விளங்கினார்.

சகோதரத்துவத்தின் நாமத்தால்  இலங்கை மக்கள் என்றவகையில் ஒன்றாக கைகோர்த்துக்கொள்ளவும் அதற்கான அரசியலை சரிவர விளங்கிக்கொண்டு நாட்டின் மரபுரீதியான பயணத்தை மாற்றியமைக்கவும் இலங்கைவாழ் இஸ்லாமிய அடியார்களுக்கு மீலாத் – உன் – நபி தினம் வலிமை சேர்க்கட்டுமென நாங்கள் வாழ்த்துக் கூறுகிறோம். 

Anura Kumara Dissanayake Mp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *