ஆசிய விளையாட்டு போட்டிகளில் மங்கோலிய அணியை 273 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய நேபாள அணி, சர்வதேச அளவில் பல்வேறு சாதனைகளை இன்று படைத்துள்ளது.
ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வருகின்றன. பல்வேறு வகையிலான போட்டிகள் நடைபெற்றாலும் அதில் கிரிக்கட் பார்க்க ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது அனைவரின் கவனமும் நேபாள அணியின் மீது திரும்பியுள்ளது. இன்று நடைபெற்ற மங்கோலிய அணிக்கு எதிரான போட்டியில் நேபாளம் சர்வதேச T20 அரங்கில் பல்வேறு சாதனைகளை தகர்த்து, தங்களின் பெயரை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறது எனலாம்.
T 20 போட்டிகளில் ஒரே இன்னிங்ஸில் அதிக ரன்கள், அதிவேக அரைசதம், அதிவேக சதம் என ஒரே போட்டியில் டி20 வடிவத்தின் சாதனை பட்டியல்களில் தஙகள் பெயரை பதிவு செய்துவிட்டது, நேபாள அணி. இன்று என்னென்ன சாதனைகள் படைக்கப்பட்டன, எந்தெந்த சாதனைகள் வீழ்த்தப்பட்டன என்பது குறித்து இதில் முழுமையாக காணலாம்.