• Fri. Nov 28th, 2025

வாக்­காளர் இடாப்பில் பெயர் இருப்­பதை உறு­திப்­ப­டுத்­துக

Byadmin

Aug 25, 2017

தேர்தல் திணைக்­களம், உலமா சபை வலி­யு­றுத்து

வாக்­காளர் இடாப்பில் பெயர்­களைப் பதிவு செய்யும் விட­யத்தில் நாட்டின் பல பகு­தி­க­ளிலும் வாழும் மக்கள் போது­மான அக்­க­றை காட்­ட­வில்லை என்ன தேர்­தல்கள் திணைக்­களம் தெரி­வித்­துள்­ளது.
இதே­வேளை, வாக்­காளர் இடாப்பு பதிவில் முஸ்லிம் சமூகம் போதிய அக்­கறை காட்ட வேண்டும் எனவும் இது தொடர்பில் கதீப்­மார்கள் குத்பா பிர­சங்­கங்­களில் தெளி­வு­ப­டுத்த வேண்டும் என்றும் அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உலமா வேண்­டு­கோள்­ வி­டுத்­துள்­ளது.
இது தொடர்பில் தேர்­தல்கள் திணைக்­களம் நேற்று வெளி­யிட்­டுள்ள ஊடக அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,
தேருநர் இடாப்பில் தனது பெயரை உட்­சேர்ப்­ப­தற்கு ஆட்­க­ளி­ட­மி­ருந்து ஆர்வம் குறைந்­துள்­ளதன் கார­ண­மா­கவோ அல்­லது குறித்த கணக்­கெ­டுப்புப் படி­வங்­களை உரிய நாளில் கைய­ளிக்க முடி­யாது போனதன் கார­ண­மா­கவோ அல்­லது கடந்த காலத்தில் ஏற்­பட்ட வெள்ள அனர்த்தம் கார­ண­மா­கவோ அல்­லது வேறு கார­ணங்­க­ளி­னாலோ தேருநர் இடாப்பில் பதிவு செய்­வ­தற்­கு­ரிய தக­வல்கள் உரிய காலப்­ப­கு­தியில் கிடைக்­கா­ததன் கார­ண­மாக கொழும்பு மாந­கர, கொழும்பு மாவட்ட மற்றும் வேறு பெரும்­பா­லான மாந­கர, நகர பிர­தே­சங்­க­ளிலும் ஒரு சில கிராம மற்றும் தோட்டப் பிர­தே­சங்­க­ளிலும் 2017 இன் தேருநர் இடாப்பில் உட்­சேர்க்­கப்­ப­ட­வி­ருக்கும் பெயர்­களின் தொகை கணி­ச­மா­ன­ளவு குறைந்­துள்­ளன.
அந்த வகையில் தனது மற்றும் தனது குடும்ப அங்­கத்­த­வர்கள் அனை­வ­ரதும் பெயர்கள் 2017 தேருநர் இடாப்பில் உட்­சேர்க்­கப்­பட்­டுள்­ள­ன­வா­வென்­பதை பரீட்­சித்துப் பார்த்து நிச்­ச­யப்­ப­டுத்திக் கொள்­ளு­மாறு தேர்தல் ஆணைக்கு வாக்­கா­ளர்­க­ளா­வ­தற்­கான தகை­மை­யுள்ள அனைத்துப் பிர­சை­க­ளி­டமும் கேட்டுக் கொள்­கின்­றது.
2017 ஆம் ஆண்­டிற்­கு­ரிய நகல், வரைவு இடாப்பு தேர்தல் ஆணைக்­கு­ழுவின் www.elections.gov.lk இணை­யத்­த­ளத்தில் காட்­சிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.
அத்­துடன் அனைத்து மாவட்டச் செய­ல­கங்­களில், பிர­தேச செய­ல­கங்­களில், உள்­ளூ­ராட்சி நிறு­வன அலு­வலகங்களில் மற்றும் அனைத்து கிராம அலு­வலர் அலு­வ­ல­கங்­க­ளிலும் 2017 ஆம் ஆண்டில் நீக்­கப்­படும் பெயர்­களும் 2017 ஆம் ஆண்டில் உட்­சேர்க்­கப்­ப­ட­வி­ருக்கும் பெயர்­களும் அடங்­கிய நிரல்­களும் 2016 இன் தேருநர் இடாப்பும் காட்­சிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.
தகை­மை­யுள்ள எவ­ரே­னு­மொரு பிர­சையின் பெயர், 2017 தேருநர் இடாப்பில் பதிவு செய்­வ­தற்­காக இது­வ­ரையில் கணக்­கெ­டுக்­கப்படவில்­லை­யாயின் 2017 செப்­டெம்பர் 6 வரை தேருநர் இடாப்பில் உட்­சேர்ப்­ப­தற்­கான கோரிக்­கை­களை அந்­தந்த மாவட்டத் தேர்­தல்கள் அலு­வ­ல­கங்­க­ளுக்கு அனுப்பி வைக்க முடியும்.
 உலமா சபையின் அறிக்கை
இதே­வேளை வாக்­காளர் இடாப்பில் பெயர்­களைப் பதிய வேண்­டி­யதன் அவ­சியம் தொடர்பில்  அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உல­மாவின் பொதுச் செய­லாளர் அஷ்ஷெய்க் எம்.எம்.ஏ முபாறக் விடுத்­துள்ள அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,
வாக்­கு­ரிமை இந்­நாட்டில் பிறந்த ஒவ்­வொரு பிர­ஜை­யி­னதும் உரி­மை­யாகும். அதனை பெற்­றுக்­கொள்­வதும், உரிய முறையில் பயன்­ப­டுத்­து­வதும் நம் ஒவ்­வொ­ரு­வ­ரி­னதும் கட­மை­யாகும்.  இந்த விட­யத்தில் நம்மில் சிலர் பொடு­போக்­கா­கவும் கவ­னக்­கு­றை­வா­கவும் நடந்து கொள்­கின்­றனர். அதன் கார­ண­மாக உத்­தி­யோ­க­பூர்­வ­மான சில காரி­யங்­களை நிறை­வேற்றிக் கொள்­வ­தற்கு சிர­மப்­ப­டு­வது மட்­டு­மல்­லாமல், அதற்­காக அரச உத்­தி­யோ­கத்­தர்­களை குறை கூறு­வ­தையும் சில சம­யங்­களில் காணக்­கூ­டி­ய­தாக இருக்­கின்­றது.
பிள்­ளை­களை பாட­சா­லை­களில் சேர்த்தல், காணி மற்றும் வீடு போன்­ற­வற்றை பதி­வு­செய்தல் போன்ற பல விட­யங்­க­ளிலும் வாக்­காளர் பதிவு அவ­சி­யப்­ப­டு­கின்­றது. எனவே இந்த விட­யத்தில் நாம் கூடுதல் கரி­ச­னை­யோடு  நடந்து கொள்ள வேண்டும்.
தற்­போது வாக்­காளர் பதிவு விபரம் தேர்­தல்கள் ஆணைக்­கு­ழுவின் இணை­ய­த­ளத்தில் வெளி­யி­டப்­பட்­டுள்­ளது
 http://www.slelections.gov.lk/web/index.php/en இதில் தங்களது பெயர் இடம்பெறாதவர்களும் இதுவரை வாக்காளராக பதிவு செய்து கொள்ளாதவர்களும் அவசரமாக தமது பிரதேச கிராம உத்தியோகத்தர்களை அணுகி அதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கேட்டுக் கொள்கின்றது. அத்துடன் கதீப்மார்கள்  இன்றைய குத்பாவில் இதனை நினைவுபடுத்துமாறும் ஜம்இய்யா கேட்டுக்கொள்கின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *