• Sat. Oct 11th, 2025

நாகப்பட்டினம் – காங்கேசன்துறை கப்பல் 10 ஆம் திகதி ஆரம்பம்

Byadmin

Oct 8, 2023

தமிழகம் நாகப்பட்டினம் காங்கேசன்துறையிடையிலான செரியாபாணி என்ற பெயரைக் கொண்ட பயணிகள் கப்பல் சேவை  பத்தாம் திகதி ஆரம்பமாக உள்ளது. இந்நிலையில்   பரிட்சார்த்த நடவடிக்கைகள், ஞாயிற்றுக்கிழமை (08) மேற்கொள்ளப்பட்டன.

அதன் பிரகாரம் இந்தியாவின் நாகப்பட்டினத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை (08) காலை புறப்பட்ட செரியாபாணி எனும் குளிர் ஊட்டப்பட்ட கப்பல் மதியம் 1.15 மணியளவில் காங்கேசன்துறை துறைமுகத்தை வந்தடைந்திருந்தது 

இந்த கப்பலில் பணியாற்றும் 14 பணியாளர்கள் மட்டுமே இந்த பரிட்சார்த்த நடவடிக்கைகளின் போது வருகை தந்திருந்தனர்.   கப்பல் சேவைக்கு பயன்படுத்தப்படும் கடல் பாதை, கடல் மற்றும் காலநிலை நிலவரம் சகல விடயங்களும் அவதானிக்கப்பட்டன. 

பரீட்சார்த்த நடவடிக்கை வெற்றிகரமாக மேற்கொண்டமையை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.சுமார் அரை மணி நேரம் தரித்து நின்ற பின்னர் மதியம் 1.45 மணியளவில் மீண்டும் இக்கப்பல் நாகப்பட்டினம் நோக்கி புறப்பட்டது.

நாகப்பட்டினம் இலங்கையிலேயே பயணிக்க இருவழிக் கட்ணமாக 53,500 ரூபாயும், ஒருவழிக் கட்டணமீக 27,000ரூபாயும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் பயணிகள் தங்களுடன் 40 கிலோ கிராம் வரை உள்ள பொருட்களைக் கொண்டு செல்ல அனுமதிக்கப்படுகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கப்பல் சேவையின் மூலம் நாகப்பட்டினத்தில் இருந்து   3 மணி நேரத்தில் இலங்கை சென்றடைய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *