குருநாகல் மாவட்டம் நாரம்மல பொல்கஹயாய பிரதேத்தில் அமைந்துள்ள மஸ்ஜித் அன்னூர் ஜும்மா பள்ளிவாயல் மீது சற்றுமுன்னர் கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.
(27.08.2017) நள்ளிரவு இரண்டு மணி அளவில் மோட்டார் சைக்கிளில் வந்த நபர்கள் பள்ளிவாயல்
மீது கல்வீசி தாக்கியபோது அங்கு தஹ்வா பணியில் இருந்த தப்லீக் சகோதரர்கள் ஒலிபொருக்கி மூலம் அறிவித்தல் விடுத்தமையை தொடர்ந்து ஊர் மக்கள் அங்கு பள்ளிவாயலில் குழுமியுள்ளனர்.
பள்ளிவாயல் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியவர்கள் தப்பி சென்றுள்ளதாக அங்கிருக்கும் எனது செய்தியாளர் மேலும் குறிப்பிட்டார்.