• Mon. Oct 27th, 2025

5 ஆயிரத்திற்கும் அதிகமான பொதுமக்கள் இஸ்ரேலின் தாக்குதல்களினால் பழி

Byadmin

Oct 25, 2023

இஸ்ரேல் வான் தாக்குதலை ஆரம்பித்த நாள் முதல் இதுவரையில் 5 ஆயிரத்திற்கும் அதிகமான பொதுமக்கள் இஸ்ரேலின் தாக்குதல்களினால் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ் விடயம் தொடர்பில் காசாவின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும், கொல்லப்பட்டவர்களில் 40 சதவீதமானோர் குழந்தைகள் என காசாவின் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அந்த அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், வான்வழி தாக்குதல்கள் இடம்பெற்ற பிரதேசங்களை சேர்ந்த சுற்று வட்டத்தில் இருந்த ஆயிரத்திற்கும் அதிகமான கட்டிடங்கள் தரைமட்டமாகியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

1 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் காசாவில் இருந்து இடம்பெயர்ந்துள்ளனர்.

இந்த நிலையில், 222 இஸ்ரேலியர்கள் தற்போது பணய கைதிகளாக ஹமாஸ் வசம் உள்ளதாக, காசாவில் நிலைகொண்டுள்ள வெளிநாட்டு செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

அத்துடன் பணயக்கைதிகள் சிலரது புகைப்படங்களும், காணொளிகளும் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *