யாழ்ப்பாணம் கே.கே.எஸ் வீதியில் அமைந்துள்ள பிரபல உணவகமொன்றில் வழங்கப்பட்ட மதிய உணவில் புழு இருந்தமையால் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பில் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர் விளக்கம் கேட்டதில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.
தனக்கு வைக்கப்பட்ட சாப்பாட்டில் புழு இருந்ததை அவதானித்த வாடிக்கையாளர், அது குறித்து அங்கிருந்த ஊழியர்களிடம் சுட்டிக்காட்டி கேட்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த கடை உரிமையாளரும் ஊழியர்களும் குறித்த நபரை கடையிலிருந்து பலாத்காரமாக வெளியேற்றியதோடு அவர் மீது மோசமாக தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
குறித்த சாப்பாட்டுக் கடையில் அடிக்கடி இவ்வாறு சுகாதார சீர்கேடுகள் நடைபெறுவதாக அந்தப் பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இது குறித்து யாழ் சுகாதார பணிப்பாளரோ அவரது பணியாளர்களோ எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுப்பதில்லையெனவும் பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.