• Sat. Oct 11th, 2025

ஹஜ்ஜாஜிகளின் வசதி கருதி, 911 உடனடி சேவை சவூதியில் அறிமுகம்

Byadmin

Aug 28, 2017

ஹஜ்ஜாஜிகள் மற்றும் புனித தளங்களில் பாதுகாப்பை உயர்தரத்தில் பேணும் நோக்கில் தேசிய பாதுகாப்பு பிரிவு 911 என்ற உடனடி சேவையை அறிமுகம் செய்துள்ளது . பொது மக்கள் 911 என்ற இலக்கத்தை தொடர்பு கொள்வதன் மூலம் உடனடி சேவையை பெற்றுக்கொள்ளலாம்

அரபு ,ஆங்கிலம் , உட்பட அணைத்து மொழிகளிலும் அழைப்பை எடுத்து தமது முறைப்பாட்டை தெரிவிக்கலாம் என்று இதற்கு   பொறுப்பான கேர்ணல் வலீத் சாமி பத்திரிகையாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளார் .

அத்தோடு இப்பிரிவு CCTV கெமரா மூலம் கண்காணிப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபடும் என்று அவர் தெரிவித்தார் .

சுமார் 50000 உயர் தரத்தில் அமைந்த கண்காணிப்பு கெமராக்கள் இதற்காக பயன்படுத்த பட்டுள்ளன.

அதில் சுமாராக 5200 கெமராக்கள் புனித நகர்களில் பொருத்தப்பட்டுள்ளன . சந்திகள் ,நகரங்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதுடன் விபத்துகள் ,தீ அபாயங்கள் போன்றவையும கவனத்தில் எடுக்கப்படுவதாக மேலும் அவர் தெரிவித்தார்.

– யூ .கே .ரமீஸ் –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *