சாதாரண தர பரீட்சையின் பின்னர் உயர்தரத்திற்கு செல்லும் மாணவர்களுக்கு 26 புதிய பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் இது நடைமுறைக்கு வரவுள்ளது.தற்போதை பரீட்சை முறயினூடாக மாணவர்களின் கல்வி அறிவு எவ்வாறுல்லதென கணிப்பிடுவதில் சிக்கல்கள் இருக்கிறதென கல்வி அமைச்சர் அகிவராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.கல்வியமைச்சில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.நடைமுறையிலுள்ள பரீட்சை முறையை மாற்றுவதற்காக நிபுணர்கள் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டிருப்பதாகவும் கல்வியமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.