2017ம் ஆண்டுக்கான இந்து சமுத்திர மாநாடு இன்று (31.08.2017) கொழும்பில் ஆரம்பமாகவுள்ளது.
இந்த மாநாட்டில் இந்து சமுத்திர பிராந்தியத்தின் பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு தொடர்பில் ஆராயப்படும் என்று நேற்று அலரிமாளிகையில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன தெரிவித்தார்.
சமாதானம், முன்னேற்றம், அபிவிருத்தி என்ற தொனிப்பொருளில் இரண்டு நாட்களை கொண்டதாக அலரிமாளிகையில் நடைபெறவுள்ள இந்த மாநாட்டினை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆரம்பித்துவைக்கவுள்ளார்.
இறுதி நாள் நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துகொள்ளவுள்ளார்.