• Mon. Dec 1st, 2025

மத்திய வங்கி ஆளுநர் விசேட அறிவிப்பு!

Byadmin

Dec 16, 2023

இலங்கை வங்குரோத்து அடைந்த நாடு என்று எவ்வித அறிவிப்பும் விடுக்கப்படவில்லை என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
அச்சந்தர்ப்பத்தில், ​​கடனை செலுத்துவதை தற்காலிகமாக நிறுத்தி வைப்பது மட்டுமே இடம்பெற்றதாக அவர் ​தெரிவித்தார்.
நாடு பொருளாதார நெருக்கடியில் இருக்கும் போது சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவைப் பெற முடியாமல் போயிருந்தால், நெருக்கடி மேலும் உக்கிரமடைந்திருக்கும் என கலாநிதி நந்தலால் வீரசிங்க குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, அடுத்த தேர்தலில் வெற்றிபெறும் எந்தவொரு அரசாங்கமும் இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுப்பது அவசியம் என மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *