மியன்மார் தூதரக வாயிலில் பொலிஸார் மறித்தும், தடுப்பை தகர்த்து எதிர்ப்புக் கோஷம்
கொழும்பு மியன்மார் அலுவலகத்திற்கு பூட்டு – அதிகாரிகள் தலைமறைவு
மியன்மார் முஸ்லிம் படுகொலைகளை எதிர்த்து இன்று ஜும்ஆத் தொழுகையின் பின்னர் கொழும்பிலுள்ள மியன்மார் தூதரகத்தை நோக்கி ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்றை முஸ்லிம் வொய்ஸ் மற்றும் சில அமைப்புக்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.
நூற்றுக்ணக்கானோர் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் முஜீபுர் றஹ்மான், எஸ்.எம். மரிக்கார், முஸ்லிம் வொய்ஸ் தலைவர் அப்துல் ஹாதி சஹீர்டீன், மேல்மாகாண சபை அங்கத்தவர் அர்ஸாத் நிஸாம்தீன், முஸ்லிம் முற்போக்கு முன்னணியின் அப்துல் சத்தார் ஆகியோருடன் அஸாத்சாலி, தேவட்டகஹா பள்ளிவாசல் ஹசன் மௌலானா, உலமா கட்சி தலைவர் முபாரக் அப்துல் மஜீத் உட்பட பல பிரமுகர்களும் கலந்து கொண்டனர். இது மட்டுமல்லாமல், மியன்மாரிலிருந்து அகதிகளாக இலங்கைக்கு வந்தவர்களும் இதில் கலந்து கொண்டனர்.
மியன்மார் தூதரகத்திற்கான வாயிலில் பொலிஸார் மறித்து நின்றபோதும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தடுப்பை தகர்த்துக்கொண்டு மியன்மார் தூதரகத்தை நெருங்கிச் சென்று எதிர்ப்புக் கோஷங்களை எழுப்பினர்.