• Sun. Oct 12th, 2025

தும்மல் வந்தால் ஒருபோதும் அடக்காதீங்க

Byadmin

Sep 13, 2025

ஒவ்வொருமுறை நாம் தும்மும்போதும் மறுபிறவி எடுக்கிறோமா! நமது உடல் தம்மை தாமே தற்காத்துக்கொள்ள/சுத்தப்படுத்திக்கொள்ள மூக்கு வழியாகவும், வாய் வழியாகவும் நுரையீரலில் உள்ள காற்றை, மிக வேகமாக வெளியேற்றும் ஒரு அற்புதமான செயல்தான் தும்மல்.

மூச்சுக்குழல், நுரையீரல், மார்பில் தேவை இல்லாத பொருட்கள் (தூசிகள், துகள்கள்) நுழைந்தாலோ, சேர்ந்தாலோ ஊடுருவாமல் தடுக்க மார்பு மற்றும் தொண்டை தசைகள் சுருங்கி வாய் வழியாக தும்மல் மூலமாக அவைகள் வெளியேற்றப்படுகின்றன.

நுரையீரலில் இருந்து வெளிப்படும் நாம் போடும் (தும்மல்) காற்று சுமார் நூற்று ஐம்பது கிலோ மீட்டர் வேகத்தில் வெளிப்படும்.

உள்ளே நுழைந்த தூசிகள், துகள்கள், கிருமிகள் எல்லாம் அந்த காற்றோடு சேர்ந்து வெளியேற்றப்படும். ஆகவே தும்மலை அடக்கக் கூடாது.

ஆனால் அதே சமயத்தில் ஒரு மீட்டிங், திருமணம், ஹோட்டலில் இருந்தாலோ, கைகுழந்தைகள் அல்லது அதிக நோயினால் பாதிக்கப்படவரை உடல்நலம் விசாரிக்கச் சென்றிருந்தாலோ சிலர் தொடர்ச்சியான தும்மலால் அவதிப்படுவர்.

அம்மாதிரி நேரங்களில் தும்மலை அடக்க நாம் இடதுகை சுண்டுவிரலை வலது கையால் பிடித்து பின்பக்கமாக இழுக்கவும்.(கோலி அடிப்பதுபோல) அப்படி இழுக்கும்போது தும்மல் பத்து, இருபது வினாடிக்குள் கட்டுக்குள் வரும்.

ஆனால் இந்த முறையை அடிக்கடி உபயோகப்படுத்தக் கூடாது.

ஏனென்றால் நம் உடலில் இருக்கவே கூடாத கழிவுகளை வெளியில் தள்ள நாம் உடலே முயற்சிக்கும் போது அதை தடுத்து நிறுத்தி, நம் உடலை நாமே கெடுத்துக் கொள்ள கூடாது.

அதிகமாக தும்முகிறவர்கள் தும்மலின் காரணம் என்ன என்பதைக் கண்டுபிடித்து மருந்துகள், மாத்திரைகள் துணையின்றி சரி செய்து கொள்ள வேண்டும். சுண்டுவிரல் தானே அதால என்ன செய்யமுடியும்னு நினைக்காதீங்க..

மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெருசுங்க…. காசா.. பணமா….. முயற்சித்து தான் பாருங்களேன்…

தும்மலைப் பற்றி ஒரு வினோத உண்மை தெரியுமா? நாம் ஒவ்வொரு முறையும் தும்மும் போதும் ஒரு மைக்ரோ ஸகென்ட் நமது இதயம் நின்று துடிக்கிறது.

ஆம்!!! ஒவ்வொருமுறையும் தும்மும்போதும் ஒரு தடவை இறந்து மறுபடியும் உயிர்ப் பெறுகிறோம். இது லண்டனில் உள்ள மருத்துவர்களின் ஆராய்ச்சியின் மூலம் வெளிவந்துள்ளது.

அதனால், நாம் எப்பொழுது தும்மினாலும் ச்சீயென்று சொல்ல வேண்டாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *