• Sun. Oct 12th, 2025

கூகுள் நிறுவனத்தின் கடும் தீர்மானம்

Byadmin

Jan 17, 2024

செயல்திறன் மற்றும் படைப்பாற்றலுக்காக செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதற்காக அதன் உலகளாவிய விளம்பரக் குழுவிலிருந்து கணிசமான எண்ணிக்கையிலான நபர்களை பணிநீக்கம் செய்வதாக கூகுள் அறிவித்துள்ளது.

வேலை குறைப்பின் விளைவாக சிறு மற்றும் நடுத்தர வணிகங்களுக்கான தளத்தில் விளம்பரம் செய்வதற்கு கூகுள் அதிக ஆதரவை வழங்க உத்தேசித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

கூகுள் நிறுவனம் தனது விளம்பரம் உள்ளிட்ட பல துறைகளில் இந்த செயற்கை நுண்ணறிவை பயன்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

அமெரிக்காவில் 80 சதவீத ஒன்லைன் வர்த்தக பரிவர்த்தனைகள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நடத்தப்படுகின்மை ஆய்வில் தெரியவந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *