• Mon. Apr 6th, 2026

TIN இலக்கம் தொடர்பில் விசேட அறிவிப்பு!

Byadmin

Jan 24, 2024

ஒருவரது தேசிய அடையாள அட்டை இலக்கத்தை வரி செலுத்துவோர் அடையாள இலக்கமாக (TIN) மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இராஜாங்க நிதி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிடிய தெரிவித்துள்ளார்.
TIN இலக்கம் பெற்றுக்கொள்ளும் பொதுவான முறை வழமைப்போன்று இடம்பெறும் நிலையில்,    பொது மக்களுக்கு மிக எளிதாக இதனை வழங்குவது தொடர்பில் நேற்று (23)  இடம்பெற்ற ஜனாதிபதியின் செயலாளருடனான கலந்துரையாடலின் பின்னர் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.
18 வயதுக்கு மேற்பட்ட சுமார் 15 மில்லியன் பேரின் சுய விபர தகவல் அமைப்பைப் பயன்படுத்தி இந்த செயல்முறை மேற்கொள்ளப்படும் என்று கூறிய இராஜாங்க அமைச்சர், இதன் மூலம் நாட்டில் அரச வருமானம் குறித்த தெளிவான தரவு அமைப்பு ஒன்று உருவாக்கப்படும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *