இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹூ தென் அமெரிக்க நாடுகளில் தற்போது சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அர்ஜெண்டினா, கொலம்பியா, மெக்சிகோ ஆகிய நாடுகளுக்கு அரசு முறைப் பயணமாக சென்று அந்நாட்டு தலைவர்களை சந்தித்து பேச இருக்கிறார்.
இந்த பயணத்தை முடித்துகொண்டு வரும் ஞாயிறு அன்று பெஞ்சமின் அமெரிக்கா செல்கிறார். அங்கு அதிபர் டொனால்ட் டிரம்ப்-ஐ சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். மேலும், ஐ.நா சபையிலும் பெஞ்சமின் பேச இருக்கிறார். இஸ்ரேல் பிரதமர் ஒருவர் தென் அமெரிக்க நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செல்வது இதுவே முதன் முறை ஆகும்.
பெஞ்சமின் அமெரிக்காவில் இருக்கும் அதே வேளையில், பாலஸ்தீன் அதிபர் மஹ்மூத் அப்பாஸ் ஐ.நா சபையில் பேச இருக்கிறார். இருப்பினும் இவர்கள் இருவரும் நேரில் சந்தித்துக்கொள்ள வாய்ப்புகள் இல்லை என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன.