• Sun. Oct 12th, 2025

பெட் ஸ்க்கேனுக்காக போராடிய, ஹுமைட் வபாத்

Byadmin

Sep 12, 2017
மஹகரகம புற்றுநோய் வைத்தியசாலைக்கு பெட்  ஸ்க்கேன் பெற்றுக் கொடுப்பதற்காக தீவிர முயற்சியை மேற்கொண்டவரும், அதுபற்றிய விழிப்புணர்வு பிரச்சாரப் பணிகளில் ஈடுபட்டவருமான மொஹமட் ஹாஜியாரின் மகன் ஹுமைட் இன்று 11.09.2017 வபாத்தாகியுள்ளார்.
மிக இளம் வயதில் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு, அந்த புற்றுநோய்க்காக சிகிச்சை பெற்றுவந்த ஹுமைட் , புற்று நோயினாலேயே வபாத்தாகியுள்ளார்.
அவரது நல்லடக்காம் நாளை 12 செவ்வாய்கிழமை  பிற்பகல் 4.30 மணிக்கு தெஹிவளை  பள்ளிவாசலில்  நடைபெறவுள்ளது.
அதேவேளை பெட்  ஸ்க்கேனுக்காக பொதுமக்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட சுமார் 250 மில்லியன் ரூபாவைக் கொண்டு பெட்  ஸ்க்கேன் கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அதற்கான  கட்டிட நிர்மாணப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மஹகரகம வைத்தியசாலைக்கு பெட்  ஸ்க்கேன் பெருத்தப்படுவதன் மூலம் பலநூறு புற்றுநோயாளர்களின் உயிர்களை காப்பாற்ற முடியுமென நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *