சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிராக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) மாவட்ட ரீதியாக தொடர்ச்சியான வேலை நிறுத்த போராட்டங்களை முன்னெடுக்க உள்ளதாக குறித்த சங்கத்தின் செயலாளர் டாக்டர்.நவீந்த சொய்சா தெரிவித்துள்ளார்.
அதன்படி, அரச வைத்தியர்கள் நாளை(12) முதல் எதிர்வரும் 15ம் திகதி வரை குறித்த வேலை நிறுத்த போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.