• Sun. Oct 12th, 2025

FLASH NEWS ! கிழக்கு மாகாண சபை 20வது திருத்த சட்டமூலத்திற்கு ஆதரவு

Byadmin

Sep 11, 2017
20வது திருத்த சட்டமூலம் இன்று கிழக்கு மாகாண சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
20வது திருத்த சட்டமூலம் இன்று (2017.09.11) கிழக்கு மாகாண சபையில் சமர்ப்பிக்கவிருந்த நிலையில் ஆளும் கட்சி உறுப்பினர்கள் ( முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தமிழ் கூட்டமைப்பு) யாரும் சபை அமர்வுக்கு சமூகமளிக்கவில்லை.
அதனை தொடர்ந்து இன்று காலை 11 மணிக்கு மீண்டும் கூடிய போது ஆளும் தரப்பு உறுப்பினர்கள் சபையில் பிரசன்னமாகி இருக்கவில்லை அதனை தொடர்ந்து மீண்டும் 1 மணிக்கு கூடிய சபையில் 20வது திருத்த சட்டமூலம் தொடர்பில் வாக்களிப்பு ஆரம்பமானது.
குறித்த சட்டமூலத்திற்கு ஆதரவாக 25 வாக்குகளும் எதிராக 8 வாக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தமிழ் கூட்டமைப்பு   இதற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.
குறிப்பிட்ட சட்டமூலம் பெரும்பான்மை பிரதேச மாகாண சபைகளில் படு தோல்வியை சந்தித்து வருவது   குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *