இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவுடன் வாகன விபத்தில் உயிரிழந்த அவரது பாதுகாப்பு அதிகாரி, பொலிஸ் கான்ஸ்டபிள் அனுராதா ஜயக்கொடி, பொலிஸ் சார்ஜன்டாக பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.
பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, அரச நிர்வாக சுற்றறிக்கை இலக்கம் 22/93இன் பிரகாரம், பதவி உயர்வுக்கு பின்னரான அடிப்படையில், பதில் பொலிஸ் மா அதிபரால் நேற்று (25) முதல் இந்த பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
விபத்தில் உயிரிழந்த பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு பதவி உயர்வு
