• Mon. Oct 13th, 2025

மின்சார சபை விடுத்துள்ள அறிக்கை

Byadmin

Jan 30, 2024

மின்சார பாவனையாளர்களுக்கு புதிய தொழில்நுட்பத்திற்கு ஏற்றவாறு மின்சார கட்டணத்தை செலுத்துவதற்கான பல வழிமுறைகளை இலங்கை மின்சார சபை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன் மூலம் மின் கட்டணத்தை மிகவும் செயல் திறனாக செலுத்த முடியும் என இலங்கை மின்சார சபை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, CEBCare மொபைல் செயலி ஊடாகவும், இணைய வங்கிச் சேவைகள் ஊடாகவும், CEB இணையத்தளத்தின் ஊடாகவும், தபால் அலுவலகம், CEB மற்றும் வங்கி KIOSK இயந்திரங்கள், Cargills, Keel’s போன்ற பல்பொருள் அங்காடிகள் மற்றும் mCash மூலமாகவும் மின் கட்டணங்களைச் செலுத்தும் வசதி பாவனையாளர்களுக்கு ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.

மின்சார கட்டணங்கள் தொடர்பில் எழும் பிரச்சினைகள் தொடர்பில் மின்சார சபை அழைப்பு நிலைய இலக்கமான 1987 இற்கு அறிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *