• Sat. Apr 4th, 2026

நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை அதிகரிப்பு

Byadmin

Jan 31, 2024

இன்று (31) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்படும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (சிபெட்கோ) அறிவித்துள்ளது.

இதன்படி, பெற்றோல் ஒக்டேன் 92 ரக பெற்றோல் விலை 5 ரூபாவால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 371 ரூபாவாகும்.

பெற்றோல் ஒக்டேன் 95 ரக பெற்றோல் விலை 8 ரூபாவால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 456 ரூபாவாகும்.

மேலும், ஒட்டோ டீசல் 5 ரூபாயால் உயர்த்தப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 363 ரூபாவாகும். மேலும் சுப்பர் டீசல் 7 ரூபாவால் உயர்த்தப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 468 ரூபாவாகும்.

இதேவேளை, மண்ணெண்ணெய் விலையும் 26 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 262 ரூபாவாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *