பொதுமக்கள் தொடர்பாக கவனம் செலுத்துதல் , செழுமையான உலகில் அனைவருக்கும் சமாதானம் மற்றும் நிலையான வாழ்வாதாரம்’ எனும் தொனிப்பொருளில் இன்று (12) 72ஆவது ஐக்கிய நாடுகள் சபையின் அமர்வு ஆரம்பமாகவுள்ளது.
குறித்த அமர்வு அமெரிக்காவின் நியூயோக்கிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் நடைபெறவுள்ளது.
இந்த கூட்டத் தொடர் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இன்றைய ஆரம்ப நிகழ்வில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் சிறப்புரையாற்றவுள்ளார்.
இந்தக் கூட்டத்தொடரில், இலங்கையின் விவகாரங்கள், நிகழ்ச்சி நிரலில் உள்வாங்கப்படவில்லை எனினும் சர்வதேச மனித உரிமை அமைப்புக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நேரத்தில் இலங்கை குறித்து கேள்விகளை எழுப்புவதற்கு வாய்ப்புள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.