• Sat. Apr 4th, 2026

சனத் நிஷாந்த மரணம் – கொள்கலன் லொறி சாரதியிடம் வாக்குமூலம் பதிவு!

Byadmin

Feb 12, 2024

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த பயணித்த சொகுசு கார் மோதிய கொள்கலன் லொறியின்  சாரதி இன்று (12) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
முன்னாள் இராஜாங்க அமைச்சர் மற்றும் அவரது பாதுகாப்பு அதிகாரியின் மரணம் குறித்து தற்போது பிரிவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொள்கலன் லொறியின் சாரதி சுமார் 5 மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கியதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
விபத்து இடம்பெற்ற விதம் சந்தேகத்திற்குரியதாக இருப்பதால், விபத்து குறித்து முறையான விசாரணை நடத்துமாறு கோரி சனத் நிஷாந்தவின் மனைவி, சட்டத்தரணி சமரி பிரியங்கா குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்தமைக்கு அமைவாக இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *