• Mon. Oct 13th, 2025

இந்தியாவில் பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு தடை

Byadmin

Feb 17, 2024

இந்தியாவின் தமிழகத்தில் பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பஞ்சு மிட்டாயில் புற்றுநோயை உண்டாக்கும் வேதிப்பொருட்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் பறிமுதல் செய்யப்பட்ட பஞ்சு மிட்டாய்களை ஆய்வுக்கு உட்படுத்தியதில் “ரோடமைன் பி” இரசாயனம் பயன்படுத்தியுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும், பஞ்சு மிட்டாயில் புற்றுநோயை ஏற்படுத்தும் நிறமி சேர்க்கப்பட்டுள்ளமையும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து பச்சை, ஊதா உள்ளிட்ட பல்வேறு நிறங்களில் விற்பனை செய்யப்படும் பஞ்சு மிட்டாய்களை கொள்வனவு செய்யகூடாது என்றும் இந்திய உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழக அரசு விதித்துள்ள தடை உத்தரவினை மீறி பஞ்சு மிட்டாய் விற்பனை செய்யப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக அரசு வர்த்தகர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *