மியன்மார் – அரக்கான் பிரதேசத்தில் ரோஹிங்ய முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்றுக்கொண்டிருக்கும் படுகொலைகள் தொடர்பில் அனைவரும் நன்கு அறிவர். இது தொடர்பாக தினந்தோறும் புது புது செய்திகள் வெளியாகிக்கொண்டே இருக்கின்றன. மியன்மாரிலும் பங்களாதேஷிலும் ரோஹிங்ய முஸ்லிம்களுக்காக சேவையில் ஈடுபட்டுள்ள அரசசார்பற்ற (NGO) நிறுவனங்களுடனும், பங்களாதேஷ் மற்றும் மியன்மார் சகோதர ஊடகங்கள் மூலமும், இலங்கையிலுள்ள ரோஹிங்ய சகோதர்கள் மூலமும் தகவல்கள் பெறப்பட்டு முஸ்லிம் வொய்ஸ் இணையத்தளம் அங்கு நடக்கும் நிகழ்வுகளில் கூடிய அவதானம் செலுத்தி வருகிறது. அவர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் கீழ்வரும் தகவல்கள் பெறப்பட்டன.
மியன்மாரிலுள்ள பௌத்த பிக்குமார்களை துருக்கி இராணுவம் தாக்குவது போலவும், கண்டதுண்டமாக வெட்டுவது போலவும் புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தளங்களில் காணக்கூடியதாக இருக்கின்றன.
இதன் உண்மை தன்மை என்னவென்றால், கடந்த கால மியன்மார் இராணுவ ஆட்சிக்கு எதிராக செயற்பட்ட பௌத்த பிக்குமார்களின் மீது மியன்மார் இராணுவம் நடத்திய தாக்குதல்களே அந்த புகைப்படங்களும் வீடியோக்களும். (கவனமாக உன்னித்து அவதானிக்கவும், அது துருக்கி இராணுவம் அல்ல)
அவர்கள் செய்யும் கொலைகளை நியாயப்படுத்தவும், மக்களை திசைதிருப்பவும், மியன்மாரில் ஒரு பயங்கரவாத முஸ்லிம் இயக்கம் இருப்பதாக சர்வதேசத்திற்கு காண்பிப்பதற்கே இவ்வாறு போலி புகைப்படங்கள் மீள் பிரசுரம் செய்யப்பட்டு பகிரப்படுகின்றன. இதில் மியன்மாரில் செயற்படும் இனவாத குழுக்கள் ஈடுபட்டுள்ளன. இதுபோல இன்னும் வேறுநாடுகளில் நடைபெற்ற சம்பவங்களும் மியன்மாரில் முஸ்லிம்களால் நிகழ்த்தப்பட்டது போன்று சித்தரிக்கப்படுகின்றன. இந்த புகைப்படங்களையும் வீடியோக்களையும் SHARE செய்வதில் மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
துருக்கி, மலேசியா, கட்டார், பஹ்ரைன், ஈரான், பாகிஸ்தான், இந்தோனேஷியா மற்றும் இன்னும் சில அரபு நாடுகளின் இராணுவங்கள் மியான்மாரிற்கு வருவதற்கு அவரவர் நாடுகளில் ஒத்திகைகள் காட்டப்பது உண்மை. அதுமட்டுமல்லாமல், அவர்கள் பிராந்திய இராணுவா முகாம்களில் இருந்து புறப்பட்டு தலைமை இராணுவ முகாம்களுக்கு வந்து மியன்மார் புறப்பட அனுமதிக்காக காத்து இருக்கின்றனர்.
இன்று வரையிலும், பங்களாதேஷ் அரசு கூட இன்னும் நாட்டிற்குள் எந்த நாட்டு இராணுவத்திற்கும் தரையிறங்குவதற்கு அனுமதிக்கவில்லை. தொண்டர் நிறுவனங்களைத் (NGO) தவிர.
மேற்குறிப்பிட்ட நாடுகள், ஐக்கிய நாடுகள் சபையிலும், இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பிலும் (OIC) இன்றுவரை அந்த நாட்டுக்கு சமாதான படையொன்றை அனுப்புவதற்காக பேச்சுவார்த்தைகளை நடத்திக்கொண்டு அனுமதிக்காக காத்துக்கொண்டு இருக்கின்றனர்.
இன்று, பங்களாதேஷ் எல்லைப்புறத்தில் அகதிகளுக்கான நிவாரணப்பணிகள் மாத்திரமே நடந்து கொண்டு இருக்கின்றன. மாறாக, மியன்மார் – அரக்கான் பிரதேசத்தில் சிக்கித் தவித்துக்கொண்டு இருக்கும் ரோஹிங்ய முஸ்லிம்களை பங்களாதேஷ், பாகிஸ்தான் இராணுவத்தால் கூட ஊடுருவி காப்பாற்ற முடியாத நிலையுள்ளது. காரணம், மியன்மார் நாடுகளுக்குள் செல்வது அந்த நாட்டின் இறைமையை மீறுவதாகும்.
இதை மீறி செயற்பட்டால் பங்களாதேஷ், பாகிஸ்தான் – மியன்மார் நாடுகளுக்கு இடையிலான இராஜதந்திர உறவுகள் முறிந்துவிடும் என்ற இக்கட்டான நிலையிலேயே பங்களாதேஷ் அரசு செய்வதறியாது உள்ளது. மியன்மார், அரங்கான் மாநிலத்தில் 8 இலட்சம் ரோஹிங்ய மக்கள் பசி பட்டினியுடன்பல இன்னல் துன்பங்களில் சிக்கித்தவித்துக்கொண்டு உள்ளனர். இந்த மக்கள் காடுகளிலும்,மலைகளிலும் ஒளிந்து வாழ்கின்றனர். பட்டினியில் பல நாட்கள் தவித்து கொண்டு இருக்கின்றனர்.ஐக்கிய நாடுகள் சபை கண்டும் காணதது போல போல இருக்கிறது.
இவர்களுக்காக, நீங்கள் ஐக்கிய நாடுகள் சபையிடமோ பங்களாதேஷிடமோ கேக்க வேண்டாம் தொழுது அல்லாஹ்விடம் துஆ கேளுங்கள்.