• Sat. Apr 4th, 2026

வனிந்து தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள அவசர தீர்மானம்

Byadmin

Apr 6, 2024


இலங்கை இருபதுக்கு இருபது ஓவர் அணித்தலைவர் வனிந்து ஹசரங்க இவ்வருட ஐபிஎல் போட்டியில் பங்கேற்க மாட்டார் என வெளிநாட்டு விளையாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது தொடர்பில் சிறிலங்கா கிரிக்கெட், இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டுச் சபைக்கு எழுத்துமூல அறிவித்தல் விடுத்துள்ளதாக அந்த செய்திகள் தெரிவிக்கின்றன.
வனிந்து ஹசரங்கவின் இடது கணுக்காலில் ஏற்பட்ட உபாதை காரணமாக அவருக்கு ஓய்வு தேவைப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால், சிகிச்சைக்காக டுபாய் சென்ற அவர், இந்த நேரத்தில் ஓய்வெடுப்பதே சிறந்தது என நிபுணர்களின் ஆலோசனை கிடைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *