• Sat. Apr 11th, 2026

என் மீது சேறுபூச, முயற்சிப்பது ஏமாற்றம் அளிக்கிறது

Byadmin

Apr 13, 2024

இலங்கை கிரிக்கெட்டின் முன்னாள் வீரரும் தற்போதைய ஐ.சி.சி போட்டி நடுவருமான குமார் தர்மசேன  தனது நிறுவனமான பின்டானா பிளான்டேஷன்ஸ் தொடர்பில் எழுந்துள்ள குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளதோடு தமக்கு எதிராக சேறு பூசும் பிரசாரம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

குறித்த நிறுவனமானது உள்ளூர் சட்டங்களுக்கு முழுமையாக இணங்கி செயல்படும் நிலையில் குற்றச்சாட்டுக்களை நிரூபிப்பதற்கு ஆதாரம் இருந்தால் அதனை முன்வைக்க வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார். 

நான் இலங்கைக்காக கிரிக்கெட்  விளையாடினேன். இப்போது நாட்டுக்காக ஏதாவது செய்ய முயற்சிக்கிறேன். சிலர் என் மீது சேறு பூச முயற்சிப்பது எனக்கு ஏமாற்றம் அளிக்கிறது.

இந்நிலையில், பொதுமக்கள் மற்றும் முதலீட்டாளர்கள் நிறுவனத்தின் மீது தொடர்ந்து நம்பிக்கை வைக்க வேண்டும்.

நிறுவனம் தொடர்பில் சந்தேகம் இருப்பவர்கள் அந்த இடத்திற்குச் சென்று அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை ஆய்வு செய்து கொள்ளலாம் என்றும் தர்மசேன குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *