• Mon. Oct 13th, 2025

இஸ்ரேல் மீது, ஈரான் தாக்குதல் ஆரம்பம்

Byadmin

Apr 14, 2024

ஈரானில் இருந்து ஆளில்லாத விமானங்கள் மூலம் இஸ்ரேல் நோக்கி, தாக்குதல்கள் ஆரம்பமாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.

இஸ்ரேலின் சேனல் 12 தொலைக்காட்சி வெளியிட்டுள்ள செய்திகளின்படி,

ஈரான் இஸ்ரேலில் உள்ள இலக்குகளை நோக்கி பைலட் இல்லாத, டஜன் கணக்கான விமானங்களை ஏவியுள்ளது என்றும். அவற்றின் விமான நேரம் மணிநேரம் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜெனரல் அமோஸ் யாட்லின்,

ஆளில்லா விமானங்களில் தலா 20 கிலோ வெடிபொருட்கள் பொருத்தப்பட்டிருந்ததாகவும், அவற்றை சுட்டு வீழ்த்துவதற்கு இஸ்ரேலின் வான் பாதுகாப்பு படை தயாராக இருப்பதாகவும் கூறினார்.

 நான்கு அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய அதிகாரிகளை மேற்கோள் காட்டி வெளியாகியுள்ள தகவல்களின்படி,  டஜன் கணக்கான ட்ரோன்களைப் பயன்படுத்தி இஸ்ரேலுக்கு எதிராக ஈரான் தாக்குதலை நடத்தியதாக அறிவிக்கபட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *