• Tue. Oct 14th, 2025

வௌ்ளத்தில் மூழ்கிய டுபாய் விமான நிலையம்

Byadmin

Apr 17, 2024

உலகில் பரபரப்புடன் இயங்க கூடிய டுபாய் சர்வதேச விமான நிலையத்தில் வெள்ளநீர் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. 
இதனை தொடர்ந்து, விமான நிலையத்திற்கு வந்த பல விமானங்கள் வேறு பகுதிகளுக்கு திருப்பி விடப்பட்டன.
ஐக்கிய அரபு இராஜ்ஜியம் முழுவதும் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பு காரணமாக அனைத்து பாடசாலைகளும் மூடப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
அத்தோடு அரசு ஊழியர்கள் வீட்டில் இருந்து பணிபுரிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுவுள்ளன.
டுபாயில் பாலைவனம் நிறைந்த பகுதிகள் அதிகளவில் உள்ளன.
வெப்பநிலையும் அதிகரித்து காணப்படும் சூழலில், ஐக்கிய அரபு இராஜ்ஜியம் முழுவதும் நேற்று பெய்த கனமழையால் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால், வீதிகளில் நீர் தேங்கியது. பல இடங்களில் வாகன போக்குவரத்தும் முடங்கியது. 
கனமழை மற்றும் வெள்ளம் எதிரொலியாக, விமான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *