பௌத்த இனவாதியும் இஸ்லாத்திற்கும், முஸ்லிம்களுக்கும் எதிராக கருத்துச் சொல்லிவரும் டான் பிரசாத்துக்கு எதிராக முஸ்லிம்கள் எவரும் பொலிசில் முறைப்பாடு செய்ய முன்வருகிறார்கள் இல்லை என பிரபல சட்டத்தரணியும், முஸ்லிம் சமூக ஆர்வலருமான சிராஸ் நூர்தீன் கவலை வெளியிட்டார்.
இதுபற்றி அவர் மேலும் தெரிவிக்கையில்,
டான் பிரசாத் சொல்வதை வட்சப்பில் பகிர்ந்து தம்மை கார்ட்போர்ட் வீரர்களாக காண்பிக்க முஸ்லிம்கள் முயற்சிக்கிறார்களே தவிர, உருப்படியான சட்டநடவடிக்கை எடுக்க முன்வருகிறார்கள் இல்லை.
இதனால் டான் பிரசாத் தனது இனவாதத்தை தங்குதடையின்றி மேற்கொண்டு வருகிறான்.
இந்நிலை தெடருவது சிறந்தல்ல. அவனுக்கெதிராக சட்டம் தன் கடமையைச் செய்ய வேண்டுமாயின் முதலில் அவனுக்கெதிராக முறைப்பாடு செய்ய வேண்டும். இந்த முறைப்பாடு பொதுமக்கள் தரப்பலிருந்து சட்டத்தரணிகளின் வழிநடத்தில் மேற்கொள்ளப்பட வேண்டும்.
அர்வமுள்ள முஸ்லிம்கள் இவ்விவகாரத்தில் செயற்பட முன்வர வேண்டும்.
ஒரு இனவாதியை சட்டத்தின் துணையுடன் தடுத்து நிறுத்துவது ஏனைய இனவாதிகளுக்கு சிறந்த பாடமாக அமையுமெனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
சிராஸ் நூர்தீனின் தொடர்பு இலக்கம் – 0777310082