• Sun. Oct 12th, 2025

சாதாரண தர பரீட்சை பாதுகாப்புக்காக விசேட வேலைத்திட்டம் 

Byadmin

May 5, 2024

கல்விப் பொதுத் தராதர சாதாரண பரீட்சையின் பாதுகாப்புக்காக விசேட வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அதற்காக 2000 பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண பரீட்சை  நாளை (06) நாடளாவிய ரீதியில் 3,527 பரீட்சை நிலையங்களில் ஆரம்பமாகவுள்ளது.
இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரண பரீட்சையில் 452,979 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர்.
குறித்த பரீட்சை ஆரம்பிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் ஏற்கனவே பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *