கொழும்பு – புறக்கோட்டையின் பிரின்ஸ் வீதியில் உள்ள விற்பனை நிலைய கட்டடத்தொகுதி ஒன்றில் நேற்றிரவு தீ பரவி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக தெரிவிக்கபடுகிறது.
இன்று அதிகாலை 1 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வர்த்தகர் நாகதேவனுக்கு சொந்தமான கொழும்பு சென்டர் என்ற கடையின் களஞ்சியத்தில் ஏற்பட்ட இந்த தீப்பரவலை அடுத்து அருகில் சில கடைகளுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எனினும் தற்போது தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
தீப் பரவலுக்கான காரணத்தை பொலிஸார் விசாரணை செய்து வருகிறார்களாம்.
மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாம்.