பத்தரமுல்ல – தலஹேன பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்து காரணமாக, மாலபே – பத்தரமுல்ல வீதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இன்று(21) காலை பேரூந்து ஒன்றும், பாரவூர்தி ஒன்றும் மோதுண்டதினால் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன், 2 பேர் காயமடைந்துள்ள நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதன் காரணமாக மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு காவற்துறை சாரதிகளை வேண்டியுள்ளது.