மியன்மாரில் வன்முறைகளால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்துவரும் ரோஹிங்யா அகதிகளுக்கு 15 மில்லியன் டொலர் உதவி வழங்குமாறு சவுதி அரேபிய மன்னர் சல்மான் உத்தரவிட்டுள்ளார்.
குறித்த அறிவிப்பு தொடர்பில் சவுதி அமைச்சரவை கூட்டத்தை தொடர்ந்து சவுதி பிரஸ் ஏஜென்சிக்கு (SPA) வந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மியன்மாரின் சிறுபான்மை ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள தப்பி ஓட வேண்டிய கட்டாய நிலைமை குறித்து நிவாரண மற்றும் மனிதநேய உதவிக்கான மன்னர் சல்மான் மையத்தின் பொது மேற்பார்வையாளர் விளங்கியதை அடுத்தே இந்த அறிவிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதேவேளை, மியன்மார் முஸ்லிம் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகளை தடுத்து அவர்களின் அடிப்படை மனித உரிமைகளை பாதுகாக்க சர்வதேச சமூகம் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டுமென கோரும் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தை கோரிக்கையை சவுதி அமைச்சரவை மீண்டும் புதுப்பித்துள்ளது.
குறித்த வன்முறைச் சம்பவங்களால் இதுவரை சுமார் 417,000 மக்கள் பங்களாதேஷுக்கு இடம்பெயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.