ஐக்கிய அரபு அமீரகம் புதிதாக 10 வருட விசேட ப்ளூ ரெசிடென்சி விசாவை அறிமுகப்படுத்தியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சுற்றுச்சூழலைப் பாதுகாக்க அயராது உழைத்தவர்களுக்கு பத்து வருட ப்ளூ ரெசிடென்சி விசாவை வழங்கப் போவதாக ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்துள்ளது.
குறித்த விடயத்தினை டுபாய் பிரதமர் ஷேக் முகமது பின் ரஷீத், தனது எக்ஸ் வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.
குறித்த பதிவில், “ஐக்கிய அரபு அமீரகத்தின் பொருளாதாரம் சுற்றுச்சூழல் சமநிலையுடன் இணைக்கப்பட்டுள்ளதுடன் இந்த விடயத்தில் எங்களின் போக்கு தெளிவாகவும், நிலையானதாகவும் உள்ளது.
கடல் விலங்கினங்கள், நிலப்பரப்பு சுற்றுச்சூழல் அமைப்புகள், காற்றின் தரம், நிலையான தொழில்நுட்பம் போன்ற துறைகளில் பணிபுரிந்தவர்களுக்கு இந்த விசாக்கள் வழங்கப்படுகின்றன.
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் அடையாளம், குடியுரிமை, சுங்கம் மற்றும் துறைமுக பாதுகாப்பு (ICP)அதிகாரிகளிடம் விண்ணப்பிக்கலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.