முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் லலித் ஜயசிங்க சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் இன்று(25) காவல்துறை விசாரணை பிரிவில் வாக்குமூலம் அளிக்க முன்னிலையான நிலையிலேயே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, வித்தியா படுகொலை தொடர்பில் பிரதான சந்தேக நபருக்கு பாதுகாப்பு வழங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யபட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இவர், கடும் நிபந்தனைகளுடன் கடந்த 13 ஆம் திகதி விடுவிக்கப்பட்டிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது